

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மத்திய - மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.