SP Velumani | AIADMK | TN Politics | கன்னிமார் தெய்வங்களை வழிபட்டு வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி

கன்னிமார் தெய்வங்களை வழிபட்டு வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி

SP Velumani | AIADMK | TN Politics | கன்னிமார் தெய்வங்களை வழிபட்டு வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி #SPVekumani #AIADMK #TNPolitics #TNElections கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கன்னிமார் தெய்வங்களை வழிபட்டு விட்டு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எஸ்.பி. வேலுமணி, தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ள கன்னிமார் கோயிலில் எஸ்.பி. வேலுமணி வழிபாடு நடத்தினார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சப்த கன்னிமார் தெய்வங்களை வழிபட்டுவிட்டு அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று எஸ்.பி. வேலுமணி வாக்கு சேகரித்தார். வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்த எஸ்.பி. வேலுமணிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com