AIADMK | TN Election | ஊர் பெரியவர்களுக்கு சால்வை போட்டு வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி
ஊர் பெரியவர்களுக்கு சால்வை போட்டு வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி
AIADMK | TN Election | ஊர் பெரியவர்களுக்கு சால்வை போட்டு வாக்கு சேகரித்த எஸ்.பி.வேலுமணி #kovai #aiadmk #tnelection2026 #election #thanthitv கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராமசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய அவர், தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குறிப்பாக, ஊர் பெரியவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், ஆதரவு திரட்டினார். "கடந்த காலங்களில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளே தனது பலம்" என்று நம்பிக்கையுடன் கூறி வரும் வேலுமணி, கோவைப்புதூர், மாதம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசி வருகிறார்.
