SP Velumani | ADMK | தனக்கு கற்பித்த ஆசிரியையை பார்த்ததும் எஸ்.பி.வேலுமணி செய்த நெகிழ்ச்சி செயல்
தனக்கு கற்பித்த ஆசிரியைக்கு சால்வை அணிவித்து ஆசி பெற்ற எஸ்.பி.வேலுமணி கோவை செல்வபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி, தனது பள்ளி ஆசிரியைக்கு மரியாதை செலுத்திய சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், செல்வபுரம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். அப்போது, தான் சிறுவயதில் பள்ளியில் படித்த போது பாடம் கற்பித்த ஆசிரியை நாகம்மாள் கூட்டத்தில் நிற்பதைக் கண்டார். ஆசிரியையைக் கண்ட மறுகணமே தனது பரப்புரை வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய எஸ்.பி. வேலுமணி, ஆசிரியை நாகம்மாளுக்குச் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
