பெண்களுக்காக நாடாளுமன்றத்தில் கர்ஜித்த சோனியா காந்தி
நாடு முழுவதும் பணியாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதோடு அவர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்...
மாநிலங்களவையில் இன்று பூஜ்ய நேரத்தின்போது உரையாற்றிய அவர், முக்கியமான அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் திட்டங்களில் பெண் பணியாளர்கள் அதிக பணிச்சுமையுடனும் குறைந்த ஊதியத்துடனும் உள்ளதாக கவலை தெரிவித்த அவர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு சொற்ப மதிப்பூதியமே வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்டத்தில் பல்வேறு நிலைகளில் கிட்டத்தட்ட 3 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் முன்கள பணியாளர்களின் ஊதியத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும்,
அங்கன்வாடிப் பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
