

உங்கள் கூற்றுப்படி சீன ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் தங்கள் உயிரை எப்படி நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள் என்பதை மக்களுக்கு விளக்குங்கள் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன ஊடுருவல் இல்லாத நிலையில் ராணுவ மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் ஏன் அதை பற்றி விவாதிக்கின்றனர் என்பது குறித்தும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என சோனியா வலியுறுத்தி உள்ளார்.