முதலமைச்சர் பற்றி அவதூறு கருத்து...பாஜக ஐ.டி விங்க் பொறுப்பாளர் கைது

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட பா.ஜ.க ஐ.டி விங்க் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட திமுக மாவட்ட மாணவரணி இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கொடுத்த புகாரின் பேரில், பா.ஜ.க கிழக்கு மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் அரசை கமல் கண்ணனை, போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.கமல் கண்ணன் கைதை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com