SIMSHelloDoctor | Chennai | இந்தியாவிலேயே முதல் முறை..சென்னையில் இருந்த இடத்திலிருந்தே மருத்துவ சேவை
இந்தியாவிலேயே முதல் முறை..சென்னையில் இருந்த இடத்திலிருந்தே மருத்துவ சேவை
சென்னையில் இந்தியாவிலேயே முதல் மருத்துவ பேருந்து சேவையை "சிம்ஸ் ஹலோ டாக்டர் - ஹெல்த் ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் சிம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் மருத்துவக் குழுவுடன், இந்த மருத்துவ பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்தே மருத்துவ சேவையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ பேருந்து சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மேலும் அப்போது தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர ராஜா, எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரும் உடன் இருந்தனர்.
Next Story
