மல்லை சத்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மதிமுக

x

மல்லை சத்யா மீது மதிமுக சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் மீது அவதூறு பரப்புவதாக மல்லை சத்யா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க மதிமுக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் மாநில சட்டத்துறைச் செயலாளர்கள் அரசு அமல்ராஜ் மற்றும் சூரி நந்தகோபால் ஆகியோர் இந்த புகாரை அளித்துள்ளனர். அதில், வைகோ, துரை வைகோ மற்றும் கட்சி கொடியை அவமதிக்கும் விதமாக பல்வேறு சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பி, கலவரத்தை உண்டுசெய்யும் விதமாகவும், அவதூறான கருத்துகளைப் பரப்புவதாக குறறம்சாட்டி உள்ளனர். மேலும், அவதூறு பரப்பிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்