"TNPSC தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் அதிர்ச்சி" - கொந்தளித்த நயினார்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில், திமுக அரசின் திட்டங்கள் குறித்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர் எனும் அடையாளம் கொண்டு மக்களை திமுக ஒன்றிணைத்ததா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுங்கட்சியை போற்றும் விதமாக கேள்வியை வடிவமைப்பது தான் டிஎன்பிஎஸ்சியின் சிறப்பம்சமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக அரசின் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர் போன்ற பதவிகளுக்கான தேர்வில் இது போன்ற கேள்விகள் அவசியம் தானா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
Next Story