``2 முறை தமிழகம் சென்ற போதும்; தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை ..'' - சிவராஜ் சிங் சவுகான்
வேளாண்துறை தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்ள, தான் இரண்டு முறை தமிழகம் சென்ற போதும், எந்த ஒரு தமிழக அமைச்சரும் கூட்டத்தில் கலந்த கொள்ளவில்லை என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய திமுக எம்பி தரணி வேந்தன், விவசாயிகள் தவணைத் தொகையை பெறுவதில் தாமதங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் எந்த விதமான தாமதமும் ஏற்படுவதில்லை என தெரிவித்தார். மேலும், வேளாண்துறை கூட்டங்களில் எந்த ஒரு தமிழக அமைச்சரும் பங்கேற்கவில்லை என குறிப்பிட்ட அவர், தாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை என தெரிவித்தார்.
Next Story
