

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நாளை பாஜகவில் இணைகிறார். பிரதமர் மோடியின் திட்டங்களை கண்டு கட்சியில் இணைந்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், நான் பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய ரசிகன், தற்போது நல்ல நேரம் என்பதால் இணைய உள்ளதாக தெரிவித்தார்.