Shashi Tharoor | Congress | சசி தரூர் செயலால் காங்கிரஸில் அதிருப்தி?
காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டத்திற்கு வராத சசி தரூர்
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி டெல்லியில் நேற்று நடத்திய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் பங்கேற்கவில்லை. இதற்பு முன்பு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. அதேசமயம், காங்கிரஸ் கூட்டம் நடைபெற்ற தினத்திற்கு முந்தைய நாள், பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசி தரூர், மோடியை புகழ்ந்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள பிற தலைவர்கள், சசி தரூர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
Next Story
