Senthilbalaji Case | செந்தில்பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உச்ச நீதிமன்றம்
செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
போக்குவரத்துத் துறை வேலைக்கு லஞ்சம் வாங்கியது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்குமாறு செந்தில் பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. 2 ஆண்டுகள் கழித்து, தீர்ப்பு அளித்த நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு மனு தாக்கல் செய்வதா? என்றும், தீர்ப்பில் ஒரு சொல்லையும் நீக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அதேசமயம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
Next Story
