மீண்டும் டெல்லி பயணமா? - காரில் விருட்டென பறந்த செங்கோட்டையன்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் டெல்லி செல்ல இருப்பதாகவும், பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல் பரவிய நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கோபிசெட்டிபாளையத்திலிருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார். அப்போது, மீண்டும் டெல்லிக்கு செல்ல இருக்கிறீர்களா? என செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நன்றி... வணக்கம் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
Next Story
