மாணிக்கம் தாகூருடன் பனிப்போரா? - ஓபனாக உடைத்த செல்வப்பெருந்தகை

x

பாஜகவிற்கு தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பது அனைத்து கட்சி கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்காததன் மூலம் தெரிய வந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக உட்பட மக்கள் நலன் மீது அக்கறை உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், பாஜக பங்கேற்காதது அதன் நிலைப்பாட்டை காண்பிப்பதாக குறிப்பிட்டார். மேலும், தனக்கும், எம்.பி மாணிக்கம் தாகூருக்கும் எந்த பனிப்போரும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்