Selvaperunthagai | ``தமிழக பட்ஜெட்ல இத பண்ணுங்க..'' | முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
`தமிழக பட்ஜெட்ல இத பண்ணுங்க..'' | முதல்வருக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
சென்னையில் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். அண்ணா சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், விவசாயிகள் போராட்டத்தால் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதைப் போல, தொழிலாளர் விரோத சட்டங்களும் திரும்ப பெறப்படும் வரை நாடு முழுவதும் போராட்டம் தொடரும் என்றார். மேலும், மறைந்த முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை தமிழகத்தில் மீண்டும் அமல்படுத்த, வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்தார்.
