செல்வப்பெருந்தகை விடுத்த எச்சரிக்கை - காரணம் என்ன? | selvaperunthagai | Congress
காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் குறித்து எத்தகைய விமர்சனங்களையும் அனுமதிக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பேசி தீர்த்துக்கொள்வதுதான் நடைமுறையாக இருந்து வரும் நிலையில், மாறாக ஊடகங்களில் கருத்து கூறுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், கட்சியின் முன்னணி தலைவர்கள் குறித்த விமர்சனங்களை கட்சி விரோத நடவடிக்கையாக கருதி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
Next Story