``சீமான் மனநிலையை பரிசோதிக்கணும்’’ - பகீர் கிளப்பிய தவெக தரப்பு

x

சீமான் மீது தவெக பிரமுகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பாம்பு கடிக்கு மருந்து தேவையில்லை என பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தவெக பிரமுகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பாம்பு கடித்தால் எந்தவிதமான மருந்தும் தேவையில்லை” என சீமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவருக்கு எதிராக தவெக பிரமுகர் பாலசுப்பிரமணியன், இந்தக் கருத்து, அறிவியல் விரோதமும் உயிருக்கு ஆபத்தானதும் என கூறி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். சீமான் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரது மனநிலை பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்