சீமானுக்கு எதிரான வழக்கில் பிப்.19-ல் உத்தரவு

x

தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு மீது வரும் 19-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில், சீமான் மீது கடந்த 2011-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இத்தனை ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்