சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு - நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் தொடர் விசாரணை

x

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில், நடிகை விஜயலட்சுமியிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் போலீசார், 12 வார காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் வளசரவாக்கம் மகளிர் போலீசார் மீண்டும் வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லையென விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நடிகை விஜயலட்சுமியிடம், வளசரவாக்கம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்