Seeman Speech | NTK | பாட்டு பாடி அனல் தெறிக்க பேசிய சீமான் - சூடுபிடித்த களம்
பாட்டு பாடி அனல் தெறிக்க பேசிய சீமான் - சூடுபிடித்த களம்
பாட்டு பாடி அனல் தெறிக்க பேசிய சீமான் - சூடுபிடித்த களம் #ntk #seeman #campining #naamtamilarkatchi #thanthitv நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருத்தணியில் வேல் ஏந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பேசிய அவர், தங்களுக்குத் தோல்வியே கிடையாது என கூறினார். 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, ஊழல் மற்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராகப் போராடுவதாகக் குறிப்பிட்ட அவர், பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார். இலவசங்கள் மற்றும் லஞ்சமற்ற ஆட்சியை மலரச் செய்யுங்கள் என கோரிக்கை வைத்த சீமான், இறுதியாகப் பாடலை பாடி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
