விஜயலட்சுமி வழக்கில் ஆஜராகாதது ஏன்? சீமான்விளக்கம்
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்காக காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. போலீசார் 12 வார காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்காக சீமான் வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. சீமான் விசாரணைக்காக ஆஜராகாத நிலையில், அதுகுறித்து விளக்கக்கடிதத்தை ஆய்வாளரிடம் வழக்கறிஞர் சங்கரன் வழங்கினார். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Next Story