சீமானுக்கு கனிமொழி பதிலடி
விழுப்புரத்தில் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி, தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி ஆகியோர் பங்கேற்று, மகளிர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ஈரோடு தேர்தலுக்கு பின்னும் சீமான் பெரியாரை பற்றி பேசினால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் த.வெ.க. தலைவர் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் இணைவதில், திமுகவுக்கு பிரச்சனை இல்லை என்றும் தெரிவித்தார்.
Next Story