``சீமான் உளவு பார்த்தார்.. ஈழம் அழிக்கப்பட அவரே காரணம்'' - ராஜீவ் காந்தி வீசிய புது குண்டு
விடுதலை புலிகளின் பதுங்கு இடங்கள், போர் தளவாடங்கள் குறித்த தகவல்களை, இலங்கை அரசுக்கு சீமான் உளவு பார்த்து அளித்ததால் தான் தமிழீழம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழீழத்தில் 6, 7 மாதங்களாக தங்கியிருந்த சீமான், விடுதலை புலிகளின் பதுங்கு இடங்கள், போர் தளவாடங்கள் குறித்து உளவு பார்த்ததாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த தகவல்களை சிங்கள அரசுக்கும், பன்னாட்டு அரசுக்கும் அவர் அளித்ததால் தான் தமிழீழம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
Next Story