Seeman | DMK vs NTK | ``சீமானின் செயல் தேவையற்றது’’ - அமைச்சர் அட்டாக்

x

சீமானின் கால்நடை மேய்ச்சல் போராட்டம் தேவையற்றது என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சனம்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வரையாடுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நீலகிரி வரையாடு 2வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு அறிக்கையை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டார்.

அப்பொழுது பேசிய அவர், 177 வரையாடு வாழ்விடப் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் ஆடு, மாடுகளை வைத்து சீமான் போராட்டம் நடத்தும் மேய்ச்சல் போராட்டம் தேவை இல்லாதது என்று கூறிய அவர்,

மதுரையில் ஒரு வனக்கல்லூரி, தென் தமிழ்நாடு மற்றும் திருச்சியில் ஒரு உயிரியில் பூங்கா கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 108 ஐ.எப்.எஸ். அதிகாரிகளில் 80 சதவீதம் பேர் வெளி மாநிலத்தினர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் வருத்தம் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்