''ஞாபகம் வருதே ஞாபகம் வருதே''.. பள்ளி ஆண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி
தனியார் பள்ளியை விட அரசு பள்ளியில் படித்து முன்னுக்கு வரலாம் என்று அரசு பள்ளி முன்னாள் மாணவர் தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 104வது நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் சந்தித்து பள்ளி பருவ நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். பின்னர் பேசிய அப்பள்ளியின் முன்னாள் மாணவர் தேவராஜ், தாங்கள் படித்த காலத்தில் கட்டமைப்பு வசதி கிடையாது எனவும், தற்போது அரசு நிறைய உதவி செய்வதனால் தனியார் பள்ளியை விட அரசு பள்ளியில் படித்து முன்னுக்கு வரலாம் என்றும் கூறினார்.
Next Story
