பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திருமண விழாவில் ஈபிஎஸ்.க்கு வழங்கப்பட்ட செங்கோல்
பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது.
அதிமுக முன்னாள் துணை சபாநயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பொள்ளாச்சி, ஊஞ்சவேலாம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து அவருக்கு பொள்ளாச்சி ஜெயராமன் வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கினார். மேலும், பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
Next Story
