"சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆணை"

12, 543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல்
"சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆணை"
Published on

வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தொடர்ந்து 35 நாட்களுக்கு திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 756 மில்லியன் கன அடி மிகாமல் தண்ணீர் திறந்துவிட கோரி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருக்கோவிலூர் அணைக்கட்டு பெண்ணையாறு பாசன பழைய ஆயக்கட்டிற்கு ஆயிரத்து 200 மில்லியன் கன அடி தண்ணீரை பிப்ரவரி முதல் தேதி முதல் ஏப்ரல் மாதத்திற்குள் திறந்துவிட கோரியும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பன்னிரண்டாயிரத்து 543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது தெரியவந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com