Sasikala | TN அரசியலின் தவிர்க்க முடியா சக்தியை சந்தித்த சசிகலா - சூடுபிடிக்கும் கூட்டணி?

Sasikala | TN அரசியலின் தவிர்க்க முடியா சக்தியை சந்தித்த சசிகலா - சூடுபிடிக்கும் கூட்டணி?

ராமதாஸ், சசிகலா சந்திப்பு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸை வி.கே.சசிகலா திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செய்தியாளர்களைத் தவிர்க்கும் வகையில் மாற்றுப் பாதை வழியாகச் சசிகலா வெளியேறிய நிலையில், இந்தச் சந்திப்பு வெறும் நலன் விசாரிப்பு மட்டுமே என ராமதாஸ் தரப்பு விளக்கமளித்துள்ளது. இருப்பினும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள சூழலில், சசிகலா, ராமதாஸை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com