TN Politics நேருக்கு நேர் சசிகலா, தினகரன் வாகனம்... சென்னை மெரினாவில் அந்த நிமிடம் எப்படி இருந்தது?
சென்னை மெரினாவில் அந்த நிமிடம் எப்படி இருந்தது?
#vksasikala | #ttvdhinakaran | #politics TN Politics நேருக்கு நேர் சசிகலா, தினகரன் வாகனம்... சென்னை மெரினாவில் அந்த நிமிடம் எப்படி இருந்தது? சென்னை மெரினாவில், ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இருந்தும் டி.டி.வி தினகரனும், சசிகலாவும் அதனை தவிர்த்துள்ளனர். அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகை தந்த டிடிவி தினகரனைத் தொடர்ந்து, சசிகலாவும் தனது ஆதரவாளர்களோடு நினைவிடத்திற்கு வருகை தந்தார். சசிகலாவின் வாகனம் நினைவிட வளாகத்திற்குள் வரும் போது, டிடிவி தினகரனின் வாகனம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் இருவரும் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து மெரினா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டு சென்றனர்.
