சம்போ செந்தில் பின்னால் `வசூல் சக்ரவர்த்தி' - கஸ்டடியில் அஞ்சலைக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 17-ஆவது நபராக, மணலி மாத்தூரை சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டருகே கடந்த 5-ஆம் தேதி ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இதுவரை 2 பெண்கள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளும்போது சங்கிலித் தொடராக அடுத்தடுத்து தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், மணலி மாத்தூரைச் சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

வழக்கில் தலைமறைவாக இருக்கும் ரவுடி சம்போ செந்திலுக்கு மாமுல் வசூல் செய்து கொடுக்கும் வேலையை வழக்கறிஞர் சிவா செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஐந்தாவது வழக்கறிஞராக சிவா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 17வது நபராக கைது செய்யப்பட்ட சிவா, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com