"தமிழ்நாட்டில் காவி திட்டங்கள் நிறைவேறாது" முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு ஓரணியில் இருப்பதால் டெல்லி அணியின் காவித் திட்டங்கள் இங்கே நிறைவேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் எம்பி இளையபெருமாளின் நூற்றாண்டு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் திமுக கூட்டணி கட்சியினர் உறுதுணையாக இருக்கின்றனர் எனக் கூறினார்.
Next Story
