சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமனறம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றில் முக்கியமான தீர்ப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றாலும், நூற்றாண்டு விழா கொண்டாடுவது வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.