"திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்தது சரியான நடவடிக்கை" - எஸ்.வி. சேகர்

"தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது" - எஸ்.வி. சேகர்
"திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்தது சரியான நடவடிக்கை" - எஸ்.வி. சேகர்
Published on

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் திருவாரூர் இடைத் தேர்தலை தள்ளி வைத்தது சரியான நடவடிக்கை என்று கூறினார். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறிய அவர், மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக மக்களுக்கு எதிரானது என்று தவறான கருத்து பரப்பப்பட்டு வருவதாகவும் எஸ்வி சேகர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com