Russia | Putin | Warning | இந்தியா வரும்முன் ஐரோப்பிய நாடுகளை பகிரங்கமாக எச்சரித்த புதின்

x

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தொடங்கி 4 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், போரை நிறுத்தும் பணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் நேரடியாக போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கான 28 அம்ச வரைவு அறிக்கையையும் வெளியிட்டார். இந்த 28 அம்ச கோரிக்கைகள் உக்ரைனுக்கு எதிராகவும் ரஷ்யாவுக்கு சாதகமாகவும் இருப்பதாக குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய நாடுகள் சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளன. இந்தநிலையில் அமைதிப் பேச்சுவார்த்தையை தடுக்கும் நோக்கத்துடன், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத திருத்தங்களை ஐரோப்பிய நாடுகள் முன்மொழிந்துள்ளதாக அதிபர் புதின் சாடியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுடன் போருக்குச் செல்ல நாங்கள் திட்டமிடவில்லை என்றும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் போரைத் தொடங்கினால், நாங்களும் அதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தகூட யாரும் இல்லாத வகையில் முழுமையான தோல்வியை ஐரோப்பிய நாடுகள் சந்திக்கும் என்றும் புதின் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்