முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தனவேலு ஊழல் புகார் அளித்துள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
முதலமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு, துணை நிலை ஆளுநரை சந்தித்து ஊழல் புகார் அளிப்பு
Published on
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தனவேலு ஊழல் புகார் அளித்துள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து புகார் அளித்துள்ள அவர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே ஊழல் புகார்கள் தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட எதிர் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com