RSS-ன் 100 ஆண்டு நிறைவுநாள் - மோகன் பகவத் சொன்ன வார்த்தை
இந்து மத தர்மத்தின்படி மதமாற்றம் என்பது இல்லை என்றும், உலக நலனை மேம்படுத்துவதே இந்து தேசத்தின் நோக்கம் என்றும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் 100 ஆண்டுகள் நிறைவுநாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், இந்துத்துவா என்ற கருத்து உலகளாவிய மதிப்புகளில் வேரூன்றியது என்றும், தர்மத்தின்படி வாழ்வதே பாரதத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார். உலக நலனை மேம்படுத்துவதே இந்து தேசத்தின் நோக்கம் என்று தெரிவித்த மோகன் பகவத், நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால் உலக மோதல்கள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார். மதம் என்பது பன்முகத்தன்மையில் சமநிலை பற்றிய அறிவு...மதமாற்றம் தர்மம் ஆகாது என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.
Next Story
