ரூ.5000 கோடி... அதிரவைத்த ED-ன் குற்றப்பத்திரிகை - சோனியா, ராகுலுக்கு பறந்த நோட்டீஸ்

x

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் 988 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் சந்தை மதிப்பு தற்போது 5000 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியாயமான விசாரணையை உறுதி செய்ய, குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டிய உரிமையை குறிப்பிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோகனே, இவ்வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 8ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்