"இந்தியர்களின் மனதில் நேதாஜி வாழ்கிறார்" - ஆளுநர் ரவி புகழாரம் | RN Ravi
நேதாஜி, இந்தியர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என, ஆளுநர் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை அண்ணாநகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய ஆளுநர் ரவி, இளைஞர்கள் தங்கள் எண்ணங்களை உயரியதாக வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு சூழ்நிலைகளில் அனுபவப்பட்டு வந்துள்ளேன் கூறிய ஆளுநர், என் வழியில் பிரச்சனைகள் வர விட்டதில்லை என்று கூறினார். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் சிறப்பாக பணியாற்றுங்கள் என்றும், இதுதான் நேதாஜி நமக்கு கற்பித்து என்றும் கூறினார்.
Next Story