தமிழக ஆளுநர் பரபரப்பு கேள்வி
காந்தி நினைவு நிகழ்வுகளை அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும், முதலமைச்சரிடம் தான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமாக மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுவோரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார் என்றும், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா? என்றும் ஆளுநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story