51 அடி உயர அதிமுக கொடி கம்பம் அகற்றம்

மதுரையில் அதிமுகவின் பொன் விழா மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றிய 51 அடி உயரம் கொண்ட அதிமுக கொடி கம்பம், அகற்றப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் மதுரை வலையங்குலத்தில் ஒரு தனியார் இடத்தில் மாநாடு நடைபெற்ற போது, இந்தக்கொடி ஏற்றப்பட்டது. மாநாடு நடைபெற்று இன்னும் 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் கொடிக்கம்பத்தை அகற்றியது அதிமுக தொண்டர்கள் இடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் வரும் 15-ஆம் தேதி மதிமுக மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com