மறுசீரமைக்கப்பட்ட பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் - அமைச்சர் உதயநிதி நேரில் ஆய்வு

சென்னை தலைமை செயலக பெண் அரசு பணியாளர்களுக்காக மறுசீரமைக்கப்பட்ட நவீன உற்பயிற்சி கூடத்தை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தொடங்கப்பட்ட உடற்பயிற்சி கூடம்ட, தற்போது மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், பல்வேறு நவீன உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. இதனை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் ஆண்கள் உடற்பயிற்சி கூடத்தையும் பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com