ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...

தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...
Published on
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் நிகழ்ந்த கலவரத்தை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய திருமாவளவன், தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com