

தமிழக முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார் .கருணாநிதியை சென்னையில் சந்தித்ததாகவும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.