"தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு" - ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மத்தியில் பாஜக தலைமையில் அமையும் ஆட்சிக்கு, அதிமுக ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"தேர்தலுக்குப்பின் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு" - ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை
Published on

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மத்தியில் பாஜக தலைமையில் அமையும் ஆட்சிக்கு, அதிமுக ஆதரவு அளிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர்

ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக - பாஜக இடையே நல்லுறவு நிலவி வருகிறது என்றார்.தமிழகத்தை பொறுத்தவரை, ஏற்கனவே முதலமைச்சர்களாக இருந்த எம்ஜிஆரும் ஜெயலலிதாவும், மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அந்த வகையில் தற்போது உள்ள தமிழக அரசும் மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணக்கமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com