Ramanathapuram | கட்சி கொடியை அகற்ற சொல்லி எச்சரித்த அதிகாரி.. காரை நிறுத்தி மாறி மாறி வாக்குவாதம்

கட்சி கொடியை அகற்ற சொல்லி எச்சரித்த அதிகாரி.. காரை நிறுத்தி மாறி மாறி வாக்குவாதம்

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், திமுக நிர்வாகி ஒருவர் தனது காரில் இருந்த கட்சி கொடியை அகற்ற மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஸ்பேனர் இல்லை எனக் கூறி அவர் தவிர்க்க முயன்றதாக கூறப்படுகிறது.. தேர்தல் விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய அதிகாரி, கொடியை அகற்றாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, கொடிக்கம்பியை உறையிட்டு மறைத்த பின்னரே அந்த வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com