அரசு விழாவாக கொண்டாடப்படும் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் : அரசின் அறிவிப்புகளுக்கு ராமதாஸ் வரவேற்பு

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அரசு விழாவாக கொண்டாடப்படும் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் : அரசின் அறிவிப்புகளுக்கு ராமதாஸ் வரவேற்பு
Published on

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல், இதழியல் மற்றும் தமிழர் நலனுக்காக ஆதித்தனார் ஆற்றிய பணிகளுக்கு சிறந்த அங்கீகாரமாக இது அமையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பென்னி குயிக், காலிங்கராயர், ம.பொ.சிவஞானம் ஆகியோரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் அறிவிப்புகளுக்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். பெரும்பிடுகு முத்தரையர், தேசிக விநாயகம் பிள்ளை உள்ளிட்டோருக்கு மணிமண்டபம் அமைக்கும் அறிவிப்புகளையும் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com