இறுதி முடிவை தெரிவித்த ராமதாஸ் - உடனே அன்புமணி எடுத்த `எதிர்பாரா’ முடிவு
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டு, டாக்டர் ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றதாக அறிவித்தார். இது கட்சியினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் உறவினர்கள் மற்றும் கட்சியை சேர்ந்த கட்சி முன்னணி நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பாலு, பசுமைத்தாயகம் அருள், தர்மபுரி வெங்கடேசன் உள்ளிட்டோர் நேற்று நள்ளிரவு வரை மருத்துவர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தான் தலைவராக இருப்பதில் உறுதியென ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு வயதாகி விட்டது நான் இருக்கும் காலம் வரை நான் தான் தலைவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் உறவினர்கள் மேற்கொண்ட சமாதான முயற்சியிலும் இதே பதிலை அவர் தெரிவித்துள்ளதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் கட்சியினர் தவித்து வருகின்றனர்.
