Ramadoss | Anbumani Ramadoss | ``எல்லாத்துக்கும் ஆரம்பப்புள்ளி இதுதான்’’ - ஓபனாக உடைத்த ராமதாஸ்

x

பாமகவில் பிரச்சனைக்கு காரணம் என்ன?- ராமதாஸ் விளக்கம்

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியையும், வேட்பாளரையும் தாம் தான் முடிவு செய்வேன் என அன்புமணி ராமதாஸிடம் கூறியதுதான் பிரச்சனைகளுக்கு காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னை பற்றி அன்புமணி ராமதாஸ் பல கட்டுக்கதைகளை தொண்டர்களிடம் கூறி வருவதாக தெரிவித்தார். கட்சியினருக்கு பணம் கொடுத்து தனக்கு எதிராக அன்புமணி பேச வைக்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்